Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 71வது குடியரசு தின நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் 71வது குடியரசு தின நிகழ்வு

இந்தியாவின் 71வது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது.இதன்போது, இந்திய தேசியக் கொடியை இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந்திய குடியரசு தலைவரின் சுதந்திர தின உரையை துணைத் தூதுவர் வாசித்தார்.நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஸ்ரீமதி யோகவந்தனா குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் ஜெயஸ்ரீ குழுவினரின் கதக் நடனமும் அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் கலைக் கழகத்தினரின் வீர பாண்டிய கட்ட பொம்மன் நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது.

வரவேற்பு நிகழ்வுகள் முற்பகல் 10.00 மணிக்கு ரில்கோ ஹோட்டிலில் ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாண ஆளுனர் திருமதி சாள்ஸ், வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே சிவஞானம், யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர், முப்படைகளின் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக இந்தியத் துணைத் தூதுவர் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையின் நினைவாலயத்தில் யாழ் கட்டளைத் தளபதி ருவான் வணிக சூரியவுடன் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.(15)AU7A0116 AU7A9419 AU7A9583 AU7A9593 AU7A9795 AU7A9823


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *