Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தாவடி மற்றும் அரியாலை பகுதிகளின் ஒரு பகுதி முற்றாக முடக்கம்

யாழ்ப்பாணத்தில் தாவடி மற்றும் அரியாலை பகுதிகளின் ஒரு பகுதி முற்றாக முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனா். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகிறது.யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் முதலாவது கொரோனா தொற்றாளி வசித்த தாவடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்களை உள்ளடக்கிய கிரமாத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. உள்ளே வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் கோாிக்கை விடுக்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதால் நோய் பரவலை தடுக்கலாம். அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். தமக்குத் தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலர் ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.அத்தியாவசிய உணவு பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவா்களுக்கு உலா் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அனா்த்த முகாமைத்துவ பிாிவு ஊடாக 1 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. பிரதமா் ஊடாக மாவட்டத்திற்கு 1 மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் பிரதேச செயலர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *