Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலைப்போரியல் வரலாற்றில் தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூறுகின்ற இந்த மாவீரர் நாளினை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கபடுகிறது.இந்நிலையில் இந்நிலையில் இன்று காலை கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று வியாழக்கிழமை காலை முதல் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.(15)1 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *