Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால்  கைது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் சதா நிமலன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் குறித்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்ட அதிபரை இன்றைய தினமும் விசாரணை மேற்கொள்வதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.இருப்பினும் அங்கு அதிபர் இல்லமையால் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் ஒரு பெண் மூலமாக அதிபருக்கு 50000 ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற அதிகாரிகளிடம் நேரடியாக மாட்டிக் கொண்டுள்ளார். மேலும் அங்கு வந்த அதிகாரிகளினால் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில் கையூட்டுப் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *