செய்திகள்

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இன்று காலை விபத்து

யாழ்ப்பாணம் பலாலி வீதி கோணடாவில் பஸ் டிப்போவிற்கு முன்பாக இன்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,இன்று காலை 9 மணியளவில் யாழ் நகரிலிருந்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியின் பின்புறமாக உரும்பிராய் பகுதி நோக்கி வெகோ மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த யுவதியை பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த யுவதி படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.(15)