Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை திறக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாளை வியாழக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.திறப்பு விழா நாளன்று இந்தியாவின் சென்னையிலிருந்து அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.இவ்வாறு தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில் இந்தியாவிலிருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு சோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு 15 குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி. ரத்நாயக்க தெரிவித்தார்.புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை ஆய்வு செய்து இந்திய அரசாங்கத்துக்கு இறுதியான அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு இந்திய நிபுணர்களின் குழு நேற்றய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தது.

மேலும் சென்னையிலிருந்து வாரத்தில் ஏழு விமானங்களைப் பலாலிக்கு இயங்க வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்துள்ளார். எனினும், வாரத்துக்கு 12 விமானங்களை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மேற்படி விமானநிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.(15)FB_IMG_1570955406548 jaffna Jaffna-Airport jaffna-airport-1024x768-1 palaly-airport-151019-seithy (2)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *