தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார்.சர்வதேச விமான நிலையம் மூலம் வட மாகாண மக்கள் தற்போது நேரடியாக விமானப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் சென்னை, திருச்சி மற்றும் கொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் வருகை தரவுள்ளன.இந்தியாவின் ‘எயார் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த ‘அலியன்ஸ் எயார்’ விமானம் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விமான நிலைய திறப்பு விழாவில், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ஆசோக்க அபேசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *