Search
Wednesday 5 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மழை காலத்தில் பயணிகள் திண்டாட்டம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மழை காலத்தில் பயணிகள் திண்டாட்டம்

கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரினாலும் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன.ஆனால் பயணிகளின் நிலை தான் பெரும் திண்டாட்டமாக உள்ளது.

விமான பயணத்துக்கு பயணிகளை பாதுகாப்பு அதிகாரி புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையில் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக நனைகின்றனர்.கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் மட்டுமே செயற்பட்டு வருகிறது.இந்நிலையில் மழை காலத்தில் பயணிகள் ஒதுங்கிக் கொள்ளவோ விமானத்தில் புறப்படுவதற்கு முன்னராக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லையெனவும் இதனால் அவர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *