Search
Friday 4 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த யாழ்.மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணை தனிமைப்படுத்த யாழ்.மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவரின் மகள் யாழ்.தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற நிலையில் அவர் உள்ளிட்ட இருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணிண் தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திவுலுப்பிட்டிய ஆடைதொழிற்சாலையில் பணிபுரிபவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து தொல்பொருள் திணைக்கள ஊழியரைதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்.மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பணியாளரின் தாய் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்தே இவரை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.யாழ்ப்பாணம் நாவலர்வீதியிலுள்ள தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் நேற்றே தனது நண்பருடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.இதனை தொடர்ந்து அவரையும் கோட்டைபகுதியில் பணிபுரியும் அவரது நண்பரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக யாழ்.மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *