கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி, ஒருவர் மரணமானார். யாழ்ப்பாணம் புங்கன்குளம் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. நல்லூர் ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே மரணமானவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.உயிரிழந்தவர் பிரபல தமிழ் பாட ஆசிரியர் மீராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)

Previous Postபண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்
Next Post'நான் போர் குற்றங்கள் செய்யவில்லை'