Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் யுத்தத்திற்கு முன்னர் கல்வியில் சிறந்து விளங்கியது-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாணம் யுத்தத்திற்கு முன்னர்  கல்வியில் சிறந்து விளங்கியது-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்வியில் சிறந்து விளங்கியது. கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணமும் கல்வியில் முன்னணியிலிருந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டது. பாடசாலைகள் அழிவுற்று ஆசிரிகள் புலம்பெயர்ந்தமையே அதற்குக் காரணம்.வடக்கில் கல்வியை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வட மாகாணசபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்று வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.வடக்கிற்கென விசேட கவனம் செலுத்தி மாகாண சபையின் ஒத்துழைப்புடன் 10 வருடத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு விசேட பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முன்பு கல்வித்துறையில் கொழும்பு மாவட்டமும் யாழ். மாவட்டமுமே முன்னணியில் திகழ்ந்தது. யுத்தத்தினால் அது பின்னடைவு கண்டுள்ளது. 1983 ன் பின்னர் பெருமளவு கல்வியியலாளர்களை வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

வடக்கு கல்வித் துறையில் நீண்டகாலப் பிரச்சினையொன்று இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. மீதமுள்ள மேலும் தொண்டராசிரியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். யுத்தம் நிலவிய காலம் பெரும் கஷ்டங்கள், துன்பகரமான காலமாகும். அக்காலத்தில் வடக்கிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியபோது இந்த தொண்டராசிரியர்களே தமது சேவை மூலம் அதனை நிவர்த்தி செய்துள்ளனர்.

அதற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். இவர்களை நிரந்தரமாக்குவதற்கு முறைமையொன்று இருக்கவில்லை. நாம் விசேட செயற்திட்டம் ஒன்றின் மூலம் இவர்களுக்கு நியமனம் வழங்க தீர்மானித்தோம். இடையில் உள்ளூராட்சி சபை தேர்தல் வந்ததால் இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் தாமதமேற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *