தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணம் வந்தார் மோடி: கவனத்தைக் கவர்ந்த காணமல் போனோர் போராட்டம்

யாழ்ப்பாணம் வந்தார் மோடி: கவனத்தைக் கவர்ந்த காணமல் போனோர் போராட்டம்

யாழ்ப்பாணம் செல்ல உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் போரின் போது காணாமல் போன தங்களது உறவினர்களை கண்டுபிடித்து தரும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று மதியம் யாழ்ப்பாணம் செல்கின்றார். இந்தப் பயணத்தின்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர்களது உறவுகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன இணைந்து கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய – இலங்கை மீனவர் பிரச்னையைத் தீர்க்கக் கோரியும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்விகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல், மீள்குடியேற்ற மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை லட்சமாக வழங்குதல்,

இந்திய – இலங்கை மீனவர்களது பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல், வளங்களை அழிக்கும் தொழில் முறையைத் தடை செய்தல், இழுவைப்படகால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், சரணடைந்தவர்களை மீள ஒப்படைத்தல், காணாமற்போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல்,போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *