Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

யாழ் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலை நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.அத்துடன் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை வடமராச்சி பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *