தலைப்பு செய்திகள்

யாழ் அராலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிக்கப்பட்டது

யாழ் அராலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிக்கப்பட்டது

கணவன் விபத்தில் உயிழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்த சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J 160 அராலி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றான, வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் எண்ணக்கருவுக்கு அமைய இராணுவ வீரர்களின் நிதிப் பங்களிப்பில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் நலன்புரி நிதியத்தின் நிதிப்பங்களிப்பில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியில் இந்த வீடு அமைக்கப்பட்டு, யாழ்.மாவட்ட கட்டளை தளபதி வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது.அத்துடன் தனிநபர் ஒருவனால், குறித்த குடும்பத்தினருக்கு குழாய் கிணறும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *