Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் காரைநகரில் கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

யாழ் காரைநகரில் கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

கம்பரெலிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஐக்கிய தேசியக் கட்சியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா, கம்பரெலிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழில் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கலாநிதி விளையாட்டுக் கழகத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.அத்துடன் பாலாவோடை உள்ளிட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆலயங்களுக்கான அடிக்கல்லும் இன்று நாட்டிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *