Search
Tuesday 15 January 2019
  • :
  • :

யாழ்.கைதடியில் போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் கைது

யாழ்.கைதடியில் போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் கைது

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20ஐ வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *