Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பதற்ற நிலை

யாழ். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பதற்ற நிலை

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் வெளியில் ஒன்று சிலரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் கத்தி ஒன்றுடனும் வாள் ஒன்றுடனும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வந்தவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவருக்கு தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். அத்துடன், அங்கு மின்குமிழ் ஒன்று தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது.1

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பக் கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *