தலைப்பு செய்திகள்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் பெயர்பலகை ஜனாதிபதிபதியினால் திரைநீக்கம்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் பெயர்பலகை ஜனாதிபதிபதியினால் திரைநீக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் பெயர்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.இதனையடுத்து இந்தியாவிலிருந்து வருகைத் தரவுள்ள முதல் விமானத்தை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்பாணம் சர்வதேச நிலையத்திற்கு எயார் இந்தியாவின் அலைன்ஸ் விமானம் வந்தடைந்ததாக அறிவிக்கப்படுள்ளது.குறித்த விமானத்தில் விருந்தினர்கள் பலர் வருகைத் தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவினை அரசியல் தேவைக்காக பயன்படுத்த கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.(15)

Airportt-2-384x288 Airportt-3-384x288 Airportt-4-384x288


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *