Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி பொது நோக்கு மண்டபத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

யாழ் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி பொது நோக்கு மண்டபத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.அதனை தொடர்ந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அப் பாடசாலையில் 5.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 25 ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.(15)2 3 41


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *