தலைப்பு செய்திகள்

யாழ் செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிப்பு

யாழ் செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிப்பு

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில் யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.குறித்த அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை மாநகர துணை முதல்வர் து.ஈசன் ஏற்றிவைத்தார்.அதனைத் தொடர்ந்து வட.மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம, வட.மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *