Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். தீவகத்தை அலங்கரிக்கும் அழகிய வெளிநாட்டு பறவைகள்!

யாழ். தீவகத்தை அலங்கரிக்கும் அழகிய வெளிநாட்டு பறவைகள்!

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் இந்த இடத்திற்கு வருவதோடு அங்கு ஒளிப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதையும் அவதானிக்கமுடிகிறது.இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடுகட்ட ஆரம்பிக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை என்றும் இவை அவுஸ்ரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜிரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் 23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை இந்த மாத இறுதியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குவதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.(15)2 42


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *