Search
Monday 18 February 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். நாயன்மார்கட்டு பகுதியில் வீடு ஒன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டுத்தாக்குதல்

யாழ். நாயன்மார்கட்டு பகுதியில் வீடு ஒன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மீது பெட்ரோல் குண்டுத்தாக்குதல்

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.குறித்த தாக்குதல் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் குறித்த வாகனம் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீடும் சிறியளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த தாக்குதல்தாரிகள் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் பெட்ரோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதோடு வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளார்கள்.குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *