Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நாவற்குழி சம்புத்தி சுமன விகாரை இன்று திறப்பு

யாழ் நாவற்குழி சம்புத்தி சுமன விகாரை இன்று திறப்பு

2010ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர். இவர்கள் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் விமல் வீரவன்சவினால் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.அந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது. பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றத் திட்டம் அமைந்துள்ள நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.இதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *