Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நாவலியில் இடம்பெற்ற வாள்வெட்டில் தந்தை மகன் படுகாயம்

யாழ் நாவலியில் இடம்பெற்ற வாள்வெட்டில் தந்தை மகன் படுகாயம்

யாழ்ப்பாணம் நவாலி அரசடி வீதியில் உள்ள ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் இனந்தெரியாக கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீட்டிலுருந்த பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள மானிப்பாய் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மேலும் ஆவா குழுவுடன் முன்னர் இணைந்து செயற்பட்ட கிருஷ்ணா என்ற இளைஞருடைய வீட்டிற்குள் புகுந்த வன்முறைக் கும்பலே இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *