Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்

யாழ் நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் வீடுகளிற்குள் புகுந்த வெள்ளம்

யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, காக்கை தீவு, பொம்மைவெளிப்பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் வழிந்தோடமுடியாத நிலையில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அங்கு வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.இதேவேளை காக்கை தீவு, பொம்மைவெளி, போன்ற தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் தேங்கிநிற்கும் பகுதிகளில் உள்ள நீரை அகற்றிவிடுவதற்குத் தனியார் காணிகள் பயன்படுத்தப்படுவதால் தனியார்கள் கட்டடங்கள் கட்டும் நிலை காணப்படுவதால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடத்திலும் இத்தகைய நிலை ஏற்படும் போது தனியார் காணிகளில் அமையப்படுகின்ற கட்டங்களை உடைத்தே தண்ணீரை வெளியேற்றவேண்டிய நிலை ஏற்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.(15)23


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *