Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நோக்கி புதிய ரயில் வெள்ளோட்டம்

யாழ் நோக்கி புதிய ரயில் வெள்ளோட்டம்

இலங்கை தொடருந்துத் திணைக்களம் இந்தியாவிடமிருந்து வாங்கிய மற்றுமொரு புதிய தொடருந்து ஒன்று யாழ்ப்பாணத்தை நோக்கி வெள்ளோட்டப் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் கொழும்பு-காங்கேசந்துறை தொடருந்துச் சேவையான யாழ்தேவி சேவையின் பெட்டிகளைத் தாங்கியவாறு இந்த புதிய தொடருந்தின் இயந்திரம் வந்துகொண்டிருக்கின்றது.

M11 என்ற இந்த தொடருந்து இன்று மாலை யாழ்ப்பாண தொடருந்து நிலையத்திற்கு வருகைதருவதுடன் காங்கேசனுறைவரை செல்லும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 19ஆம் நாள் S13 எனப்படும் மற்றுமொரு புதிய தொடருந்து யாழ்ப்பாணத்துக்கு வெள்ளோட்டப் பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தொடருந்து மார்க்கங்களில் வடக்கு தொடருந்து மார்க்கமே அதிக நீளம்கொண்டது என்பது இங்கு குறுப்பிடத்தக்கதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *