Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் பல்கலைகழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபவனிக்கு வவுனியாவில் பலத்த வரவேற்பு

யாழ் பல்கலைகழக மாணவர்களின் கவனயீர்ப்பு  நடைபவனிக்கு வவுனியாவில் பலத்த வரவேற்பு

யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவணி 4ஆவது நாளான இன்று காலை ஓமந்தையிலிருந்து வவுனியா தாண்டிக்குளத்தில் வைத்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டு வவுனியா நகருக்கு நடைபவனி அழைத்துச் செல்லப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் நடைபவனியினருக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், பொது அமைப்புக்கள், வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கம், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அனுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கோசங்களை எழுப்பியவாறு ஆரம்பமான நடைபவனிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு நடைபவனி இன்று காலை வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது .(15)2 37


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *