Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் நேற்று (13) மாலை முதல் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்படவிருந்த சகல பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வளாகத்தில் கற்கும் மாணவன் ஒருவரின் சகோதரர் ஒருவருக்கு கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் சகோதர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் வரும் வரையில் இவ்வாறாக அந்த வளாகத்தை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *