Search
Thursday 13 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு  மலரஞ்சலி

இன்று செவ்வாய்க்கிழமை யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தில் மதியம் 12.30 மணியளவில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு மாவீரர் நினைவாலயத்தில் இடம்பெற்றது.யாழ் பல்கலைக்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் நினைவுச் சின்ன திடலில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்ல மாதிரிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த நிகழவில் . மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மற்றும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்த உறவுகள் பூக்கள் மற்றும் பூமாலை கொண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஆசிரியர், மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)

1 2 3 4 6


One thought on “யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி

  1. V.Makasenan

    செய்தியை திருத்தவும். அது பொங்குதமிழ் நினைவு சின்னம் இல்லை. அது மாவீரர் தூபி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *