Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் சூரிய கிரகணத்தை அவதானிக்க சிறப்பு நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் சூரிய கிரகணத்தை அவதானிக்க சிறப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை 26 டிசம்பர் 2019 அன்று பெறவுள்ளது. டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் முற்றாக அவதானிக்க முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம், மேற்கு நோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சூரிய கிரகண அவதானிப்பு முகாம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்தார்.இந்நிலையில், சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளன.

மேலும் நிகழ உள்ள சூரிய கிரகணம் மனித உடலில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைக்கு ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *