Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனிக்கு கிளிநொச்சியில் பலத்த ஆதரவு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனிக்கு கிளிநொச்சியில் பலத்த ஆதரவு

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகிய நடைபவனி நேற்று கிளிநொச்சி நகரை சென்றடைந்தபோது கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்தில் கிளிநொச்சி மக்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி நேற்று கிளிநொச்சி நகரை வந்தடைந்தது. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடைபவனியை ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்றய தினம் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்தில் மதிய நேர உணவினை முடித்துக் கொண்டு கொக்காவில் நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.(15)walk-to-anuradhapura-101018-seithy (4) walk-to-anuradhapura-101018-seithy (3)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *