Search
Tuesday 18 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு நடைபவணி ஓமந்தையிலிருந்து மதவாச்சி நோக்கி ஆரம்பமாகியது

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு  நடைபவணி ஓமந்தையிலிருந்து மதவாச்சி நோக்கி ஆரம்பமாகியது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அநுராதபுரம் நோக்கி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணி, நேற்று ஓமந்தையை சென்றடைந்திருந்த நிலையில் இன்று காலை மதவாச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.ஓமந்தையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணி, வவுனியா ஊடாக சென்று மதவாச்சியில் நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *