செய்திகள்

யாழ். பல்கலையில் தடைகளை தகர்த்தெறிந்து மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரா் நினைவு துாபியில் மாவீரா் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இதேவேளை, பல்கலைக்கழக வாளாகத்துக்குள் மேலும் பல மாணவர்கள் நுழைய முற்பட்டதையடுத்து வாயிலில் அசாதாரண நிலை தற்போது தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் தடைகளையும் மீறி இன்று வியாழக்கிழமை காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இந்த நிகழ்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.(15)IMG-20191127-WA0008-720x450