Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவு தினம்  அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த இந்திய ராணுவம் அக்டோபர் 21 தீபாவாளி தினத்தன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என ஒருவரைக் கூட விட்டுவைக்கவில்லை. மொத்தம் 70 பேர் மருத்துவமனையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண பொது மருத்துவமனையே ரத்த வெள்ளத்தில் மிதந்தது.சடலங்களைப் போல நடித்து உயிர் தப்பியவர்கள், தண்ணீர் தண்ணீர் என கதறியபடியே மரணித்தவர்கள் என எண்ணற்ற ஓலங்களை உள்ளடக்கியது யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலை வரலாறு.

இன்று யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள் அஞ்சலி செலித்தினர்.(15)2 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *