Search
Thursday 21 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மண்டைத்தீவில் இரண்டு கிணறுகளுக்குள் 120 எலும்புக் கூடுகள் : கண்டறியுமாறு சபையில் வலியுறுத்திய சிறிதரன்

யாழ் மண்டைத்தீவில் இரண்டு கிணறுகளுக்குள் 120 எலும்புக் கூடுகள் : கண்டறியுமாறு சபையில் வலியுறுத்திய சிறிதரன்

யாழ்ப்பாணம் மண்டைதீவிலுள்ள இரு கிணறுகளில் 120 இளைஞர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இந்த கிணறுகளை உடனடியாக தோண்டப்பட்டு அதற்குள் கொன்றுபோடப்பட்டுள்ள இளைஞர்களின் விவரங்கள் கண்டறியப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பியான சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இராசாயன ஆயுதங்கள் சமவாயகம்(திருத்தம்) சட்டமூலம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகவிருந்த டென்சில் கொப்பேகடுவவினால் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்த 120இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு மண்டைதீவு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவு தோமையார் தேவாலயக் கிணறு மட்டும் செம்பாட்டுத் தோட்டக் கிணறு ஆகியவற்றில் போடப்பட்டு அக்கிணறுகள் கொங்கிறீட்டினால் மூடப்பட்டன. இந்த கிணறுகளை உடனடியாக தோண்டப்பட்டு அதற்குள் கொன்றுபோடப்பட்டுள்ள இளைஞர்களின் விவரங்கள் கண்டறியப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *