தலைப்பு செய்திகள்

யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியது

யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியது

வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி தலைவர் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்த நிலையில் போட்டி இடம்பெற்று வருகின்றது.விஜயகாந்த் வியாஸ்கந்த் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி அணியினரும் நாகேந்திரராஜா சௌமியன் தலைமையில் சென். ஜோன்ஸ் கல்லூரியினரும் போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஞானபொன்ராஜா ஆகியோர் தலைமையில் இன்று காலை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் வீரர்கள் அறிமுகம் மற்றும் நாணயச்சுழற்சி இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 114 ஆவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது வரை யாழ். மத்திய கல்லூரி அணி 7 இலக்குகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்றுள்ளது (15)Battle-Of-The-North-114th-Match-2020-1 Battle-Of-The-North-114th-Match-2020-2 Battle-Of-The-North-114th-Match-2020-3 Battle-Of-The-North-114th-Match-2020-4 Battle-Of-The-North-114th-Match-2020-5 Battle-Of-The-North-114th-Match-2020-6 Battle-Of-The-North-114th-Match-2020-7 Battle-Of-The-North-114th-Match-2020-15 Battle-Of-The-North-114th-Match-2020-18


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *