தலைப்பு செய்திகள்

யாழ் மத்திய கல்லூரி விடுதி புனரமைப்புக்கு 100 மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி உறுதி

யாழ் மத்திய கல்லூரி விடுதி புனரமைப்புக்கு 100 மில்லியன் ரூபா வழங்க ஜனாதிபதி உறுதி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை (09) நடைபெற்றபோது அதில் பிரேத விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தங்கள் கல்லூரியின் மாணவர் விடுதி நீண்ட காலமாக புனரமைக்காமல் சேதமடைந்துள்ளதாகவும், அதனை மீள அமைக்க வேண்டிய தேவையுள்ளதால், நிதியுதவி தேவைப்படுவதாக கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில், கல்லூரியின் 200ஆவது ஆண்டை நினைவுபடுத்தி முத்திரை வெளியிடப்பட்டது. அதனை ஜனாதிபதி வெளியிட்டு வைத்தார். கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கான தர்மலிங்கம் சித்தார்த்தன். அங்கஜன் இராமநாதன், முன்னாள் அமைச்சர் கே.என்.டகளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *