Search
Friday 21 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாதகலில் மயானத்தில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர்!

யாழ் மாதகலில் மயானத்தில் இருந்து  வெளியேறிய  இராணுவத்தினர்!

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதிமயானக் காணியில் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டு நிலைகொண்டிருந்தனர். பல வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதேச சபையைக் கோரியிருந்தனர்.இந்நிலையில் வலி.தென்மேற்கு பிரதேசத்தில் மாதகல் முதலாம் வட்டாரத்திலுள்ள போதி மயானத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மயானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டுள்ளது.

குடாநாட்டில் அரச காணிகளில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினர் படிப்படியாக வெளியேறி வருகின்றார்கள். இந்தநிலையில் வலி.தென்மேற்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான போதி மயானத்தில் முகாமிடு நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கடந்தவாரம் மயானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.இந்நிலையில் தற்போது பொதுமக்களில் வேண்டுகோளுக்கமைய மயானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *