தலைப்பு செய்திகள்

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

தற்பொழுது நிலவும் மழையுடனான கால நிலையயை அடுத்து யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரித்துள்ளார்.

இந்த வருடத்தில் மேல் மாகாகணத்தில் மாத்திரம் 26,666 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சில மாதங்களில் 55,723 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 17 ஆம் திகதி வரையில் 3,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *