Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ். மாவட்டத்தில் பிரதேச செயலர்கள் இடமாற்றம்

யாழ். மாவட்டத்தில் பிரதேச செயலர்கள் இடமாற்றம்

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில் சில பிரதேச செயலர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச செயலராக கடமையாற்றிய சிறி பருத்தித்துறை பிரதேச செயலராகவும், ஊர்காவற்துறை பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி எழிலரசி நல்லூர் பிர தேச செயலராகவும், சங்கானை பிரதேச செயலராக கடமையாற்றிய எஸ்.சோதிநாதன் வேலணை பிரதேச செயலராகவும், கோப்பாய் மேலதிக பிரதேச செயலராக கடமையாற்றிய பிரேமினி சங்கானை பிரதேச செயலராகவும், பருத்தித்துறை பிரதேச செயலராக கடமையாற்றிய த.ஜெயசீலன் வட மாகாண சபைக்கும் ஊர்காவற்றுறை பிரதேச செயலராக திருமதி மஞ்சுளாதேவியும் தெல்லிப்பழை பிரதேச செயலராக கடமையாற்றிய எஸ்.சிறீமோகன் கரவெட்டி பிரதேச செயலராகவும், கரவெட்டி பிரதேச செயலராக கடமையாற்றிய த.சிவசிறி தெல்லிப்பழை பிரதேச செயலராகவும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இடமாற்றம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நேற்றைய தினம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *