Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.இதன் போது யாழ் மாவட்டத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்களின் காணிகள் குறித்தும் விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.மேலும் குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் கலந்து கொண்டிருந்தார்.6

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இராணுவம், பொலிஸார், கடற்படையினர் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *