Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ் மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.யாழ் மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சமுர்த்தி சௌபாக்கியா எனும் இந்த வர்த்தக கண்காட்சியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று ஆரம்பித்து வைத்தார்.

இந்த கண்காட்சி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்ளுர் உற்பத்தியாளர்கள் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட காட்சி கூடங்களில் தமது உற்பத்திகளை இதில் சந்தைப்படுத்தியுள்ளனர்.மத்திய வங்கியின் வடமகாண பிராநத்திய பணிப்பாளர் ஆர்.சிவதீபன் யாழ் மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் மற்றும் பெருமளவான பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.(15)5acb0ac37ed19-IBCTAMIL 5acb0ac365bb9-IBCTAMIL 5acb0ac341361-IBCTAMIL


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *