Search
Thursday 19 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் ஆளுனருடன் கலந்துரையாடல்

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் ஆளுனருடன் கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கேட்டுக்கொண்டுள்ளார்.யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது யாழ் மாவட்டத்தில் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *