Search
Tuesday 17 September 2019
  • :
  • :

யாழ்.முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்.முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடாத்தப்பட்டுள்ளது .குறித்த ஆர்ப்படடத்தில் ஈடுபடடவர்கள் நாட்டில் தற்போது உருவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.அத்துடன் நாட்டில் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் யாழ் முஸ்லிம் மக்களினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பொருட்டும் அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டும் குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *