Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் கைது

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பெண் கைது

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர்.அதன் போது அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருள்ளை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள். அதனையடுத்து பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *