Search
Tuesday 19 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் வடமராச்சி வல்லை பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்

யாழ் வடமராச்சி வல்லை பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைவெளி பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.வல்லை முனீஸ்வரன் கோவிலை அண்டிய பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம் மாலை ஒட்டப்பட்டு இருந்தன. அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றியுள்ளனர்.அதேவேளை குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

போர் மௌனித்ததே தவிர,போராட்டம் சாகவில்லை எனவும், தழிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டியும் சுவரொட்டியில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆயுத போராட்டமானது , 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முடிவுக்கு வந்ததே தவிர அது மரணமடையவில்லை. மௌனத்திற்குள் அது தன் இயங்கு நிலையில் உள்ளதென்பதை அனைவரும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *