Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் வரணியில் மாணவனுக்கு வாள்வெட்டு!

யாழ் வரணியில் மாணவனுக்கு வாள்வெட்டு!

வரணி இயற்றாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நண்பர்கள் கூடி மது அருந்தியுள்ளனர். அதன்போது அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தில் மீசாலையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 19 வயதுடைய மாணவனே வெட்டுக்காயத்துக்குள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், வைத்தியசாலைக்குள் நேற்றிரவு 7 மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் கும்பல் மோதலில் ஈடுபட அங்கு ஏற்பட்ட பதற்றத்தையடுத்து சாவகச்சேரி பொலிஸார் அழைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவன் வெட்டுக்காயத்துக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல், மாணவனுடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *