தலைப்பு செய்திகள்

யாழ் வல்வெட்டித்துறையில் வங்கி முகாமையாளர் வீட்டில் தேடுதல் இருவர் கைது

யாழ் வல்வெட்டித்துறையில் வங்கி முகாமையாளர் வீட்டில் தேடுதல் இருவர் கைது

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.இந்தத் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் பயணித்த ஜீப் வாகனம் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றின் முகாமையாளரின் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.எனினும் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாம் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர்.

அத்துடன் இன்று நண்பகல் 12 மணியளவில் முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்தனர்.தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவரில் ஒருவர் கரவெட்டி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கிராம சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது,இந்நிலையில் பொலிஸார் உரியவாறு எனது வீட்டை சோதனையிடக் கோரியிருந்தால் அனுமதியளித்திருப்பேன். அதிகாலை 2 மணிக்கு வீட்டு மதில் பாய்ந்து உள்நுழைந்து எனது வீட்டுக் கதவைத் தட்டிய பொலிஸாரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வங்கி முகாமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *