Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ்.வல்வெட்டித்துறையில் இராணுவத்தினா் திடீா் தேடுதல் நடவடிக்கை

யாழ்.வல்வெட்டித்துறையில் இராணுவத்தினா் திடீா் தேடுதல் நடவடிக்கை

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியதாக தேடப்படும் முக்கிய இளைஞன் உள்ளிட்ட 6 பேர் தங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.இதன்போது இளைஞன் ஒருவரையும் இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லை.குறித்த வீட்டினை இன்று வியாழக்கிழமை பெருமளவிலான இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *