Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்

யாழ் வீராங்கனை ஆர்ஷிகா தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்

அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல் போட்டிகளில் தங்கப் பதக்கங்ளை வென்று சாதனைகளுக்கு மேல் சாதனை படைத்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா முதல்தடவையாக நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர்தெற்காசிய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் (64 KG) பளு தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

தெற்காசிய விளையாட்டு விழாவினை இலக்காகக் கொண்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றன.இதில் பெண்களுக்கான 64 மற்றும் 71 ஆகிய கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் பங்குகொண்ட ஆர்ஷிகா, ஸ்னெச் முறையில் 70 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 95 கிலோ கிராம் எடையையும் தூக்கி தனது திறமையை வெளிப்படுத்தி தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *